தனுசு ஏப்ரல் 2025 மாத ராசி பலன்
AstroVed’s Astrology Podcast - En podcast av AstroVed - Onsdagar
Kategorier:
இந்த மாதம் நீங்கள் சவாலான காலக்கட்டத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். கடின உழைப்பை மேற்கொண்டாலும் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். அலுவலக நிர்வாகம் மற்றும் பணியிடத்தில் உங்கள் குழுவைக் கையாள்வதில் சிக்கல்கள் இருக்கலாம். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை தற்போதைக்கு நிறுத்தி வைக்க வேண்டும். அதன் மூலம் எந்த நஷ்டமும் வர வாய்ப்பில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அற்புதமான உறவுகளை நீங்கள் கொண்டிருக்கலாம். இது உறவின் ஸ்திரத்தன்மைக்கு நல்ல நேரம். காதலர்களுக்கு இந்த மாதம் மிகவும் இனிமையான கட்டம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணத்தைத் திட்டமிடுவதற்கு ஏற்ற நேரம். ஆனால் தேவையில்லாமல் செலவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் உங்களால் பணத்தை சேமித்து வைக்க முடியும். பள்ளி அல்லது பட்டதாரி மாணவர்களைப் பொறுத்தவரை இந்த மாதம் அனுகூலமான பலன்களை அளிக்கும். ஒரு சில மாணவர்கள் கல்விக்கான ஊக்கத் தொகையைப் பெறலாம். இந்த மாதம் நீங்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பீர்கள்.
